Uncategorized

1.71 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.13,750 கோடி வங்கிக்கடன்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை,தமிழகத்தில் நகர்ப்புறங்களில் திருநங்கைகளுக்கு குழு உருவாக்கப்படுகிறது. மேலும் 1.71 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.13,750 கோடி வங்கிக் கடன்

Desk Uncategorized
Published अक्टूबर 31, 2026
Reading time 1 minutes
Conversation No comments
codex-3d0c34ea0a3441a5b90900a132073cca
Foto : Barbara Anderson - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – சென்னை,தமிழகத்தில் நகர்ப்புறங்களில் திருநங்கைகளுக்கு குழு உருவாக்கப்படுகிறது. மேலும் 1.71 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.13,750 கோடி வங்கிக் கடன் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. .சிங்கப்பெண் கடன்தமிழகத்தில் நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் பெற்றுத் தருதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளை நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் தீனதயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின்கீழ், நகர்ப்புறங்களில் 1.71 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. .ரூ.13,750 கோடி வங்கிக்கடன் பெற்றுத் தர இலக்கு2026-27-ம் நிதியாண்டில் நகர்ப்புற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.13,750 கோடி வங்கிக்கடன் பெற்றுத் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்-அமைச்சரின் சிங்கப்பெண் கடன் திட்டத்தின் கீழும் கடன் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், செயல்படாமல் உள்ள 20 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்களை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவும், 45 ஆயிரம் குழுக்களை பகுதி அளவிலான கூட்டமைப்புகளுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. .திருநங்கைகள்நகர்ப்புறங்களில் 1,000 திருநங்கைகளை ஒருங்கிணைத்து 180 குழுக்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 75 திருநங்கைகள் குழுக்களுக்கும், 100 தனிநபர் திருநங்கைகளுக்கும் சிறு தொழில் தொடங்க உதவிகள் வழங்கவும், 100 திருநங்கைகளுக்கு தொழில்பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் நகர்ப்புற இளைஞர்கள் 5,000 பேருக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 8,500 மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரம் தொழில் முனைவோரை உதயம் திட்டத்தின் கீழ் புதிதாகப் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

Frequently Asked Questions

What is 1 71 லட சம மகள ர ச?

1 71 லட சம மகள ர ச is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does 1 71 லட சம மகள ர ச matter?

1 71 லட சம மகள ர ச matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment