ஆதவ் அர்ஜுனாவின் மேகதாது விவகாரக் குற்றச்சாட்டுக்கு ரகுபதி பதில்
Hindinewslive247.com – ல ட டர ய ல கவனம – திமுகவின் முன்னாள் அமைச்சர் ரகுபதி தனது அறிக்கையில், ஆதவ் அர்ஜுனா மேற்கொண்ட குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானவை எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் உறுதியாக இருந்துள்ளது என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது வழக்கு மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க அனுமதி கேட்கும்போது, தமிழ்நாட்டின் எதிர்ப்புகள் இன்றி அது தயாரிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்துதான் திமுக ஆட்சியில் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றோம் என ரகுபதி விளக்கியுள்ளார்.
மேகதாது அணை திட்டமே கூடாது என்பதே நமது முதன்மை நிலைப்பாடு. அந்த வழக்கில் மேகதாது அணையே கூடாது என்பது தான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு. அப்படி இருக்கையில் தமிழ்நாட்டின் எதிர்ப்பின்றி DPR தயாரிக்க வேண்டும் என்பது தவறானது என்கிறோம். அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்யவில்லை. இன்னும் அணைக்கான அடிப்படை வேலைகளே தொடங்கப்படாததால், இது ஒரு தொடக்க கட்டம் என்றே கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.
லாட்டரி கவனம் செலுத்துபவர்களுக்கு இது புரியாது
குழந்தையே பிறக்காத போது பெயர் வைப்பதைப் போன்ற சூழல்தான் இது. ஆனால் ஆதவ் அர்ஜுனாவிற்கு இதெல்லாம் புரியாது. புரிய வாய்ப்பு கிடையாது. ஏன் என்றால் அவர்கள் லாட்டரியில் கவனம் செலுத்துபவர்கள். இப்போது புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். ஆகவே அவர் அவ்வாறு தவறான தகவலை கூறி உள்ளார்.
லாட்டரியில் கவனம் செலுத்துபவர்களுக்கு இது புரியாது.
காவிரி நீர் மற்றும் டெல்டா விவசாயிகள்
எங்களைப் பொறுத்தவரை கடந்த 2-3 மாதங்களாகத் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி தண்ணீர் வரவில்லை. டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். எனவே சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் போராடி காவிரி நீரைப் பெற வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான கோரிக்கை.
கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணை பிரச்சனையை தீர்க்க உடனே ஒரு தீர்ப்பாயத்தை அமைக்க வலியுறுத்த வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிலைப்பாடு
மேகதாது அணையைக் கட்டுவதற்கு திமுக அரசு ஒரு சொட்டு கூட, ஒரு படி கூட, ஒரு அங்குலம் கூட அனுமதித்தது கிடையாது. காவிரி டெல்டா விவசாயிகளைக் காப்பதில் திமுக தலைவர் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-க்கு நிகர் எவருமில்லை.
ஆனால் இப்போது முதல்-அமைச்சர் கர்நாடகா செல்ல இருப்பதாக கூறுகிறார்கள். அதற்காக ஏதாவது சாக்கு போக்கு காரணத்தை கூற வேண்டும் என திமுக மீது வீண் அவதூறு பரப்புகிறார்கள். ஆனால் இன்றைய அரசு கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல முயற்சிப்பது பயனற்றது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்த முடிவும் வந்ததில்லை; அது வெறும் ரீல்ஸ் எடுக்க மட்டுமே உதவும்.
பேச்சுவார்த்தை என்பது விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்து, காலதாமதத்தை மட்டுமே ஏற்படுத்தும். மக்கள் நலனிலும் டெல்டா விவசாயிகள் நலனிலும் பட்டும் படாமல் இருக்கிறார்கள். முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளின் மொத்த உருவம்தான் தமிழக வெற்றிக் கழகம்.
வழக்கறிஞர் உமாபதி குறித்து சட்டமன்றத்தில் நல்லவிதமாக பேசிய ஆதவ் அர்ஜுனா இப்போது மாற்றி பேசுகிறார். முன்பொரு பேச்சு, இப்போது ஒரு பேச்சு என முரண்படுகிறார்கள்.

