நீர் பங்கீட்டு முறையை மாற்ற முடியாது எனக்கூறி மேகதாதுவுக்கு நடுவர் மன்றம் கோருவது ஏன்?” – திமுக-விற்கு பி.ஆர்.பாண்டியன் கேள்வி
ந ர பங க ட ட ம - சென்னை,நீர் பங்கீட்டு முறையை மாற்ற முடியாது எனக்கூறி மேகதாதுவுக்கு நடுவர் மன்றம் கோருவது ஏன்?" என்று திமுக-விற்கு பி.ஆர்.பாண்டியன் கேள்வி
Table of Contents
Hindinewslive247.com – ந ர பங க ட ட ம – சென்னை,நீர் பங்கீட்டு முறையை மாற்ற முடியாது எனக்கூறி மேகதாதுவுக்கு நடுவர் மன்றம் கோருவது ஏன்?" என்று திமுக-விற்கு பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-.கோருவது ஏன்?காவிரி நடுவர் மண்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் நீர் பங்கீட்டு முறையை மாற்ற முடியாது என்று கூறும் திமுக, மேகதாது அணைக்கு நடுவர் மன்றம் கோருவது ஏன்? வன்மையாக கண்டிக்கிறேன் பிஆர்.பாண்டியன் கர்நாடக முதலமைச்சர் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை பின்பற்றி உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் பற்றாக்குறை காலத்தில் பாசன தண்ணீரை பங்கீட்டு கொள்ளும் கணக்கீட்டை மாற்ற முடியாது என உறுதிபட கர்நாடகாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கண்டனம் தெரிவித்துள்ளார்..விளக்கமளிக்க வேண்டும்ஆனால் அதே நேரத்தில்1956 பன் மாநில நீர் தாவா சட்டத்தின் அடிப்படையில் மேகதாது அணைக்கு நடுவர் மன்றம் கோரியதை நியாயப்படுத்த முயற்சிக்கும் உதயநிதி ஸ்டாலினின் அறிக்கை குறித்து திமுக விளக்கமளிக்க வேண்டும்..நியாயப்படுத்த முயற்சிகாவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிட்ட பிறகு 1956 பன் மாநில நீர் தாவா சட்டம் இனி பொருந்தாது.
ஏற்கனவே மன்னர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களும் பொருந்தாது என்பதை நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு தெளிவாக கூறியுள்ளது. சுப்ரீம் கோட்டும் அதனை ஏற்றுக்கொண்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு செயல்பாட்டில் உள்ள நிலையில், திமுக தன்னிச்சை போக்கோடு நடுவர் மன்றம் கோர எடுத்த முடிவை நியாயப்படுத்த முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்..கடிதம் எழுதப்பட்டதா?2026 மார்ச் மாதம் திமுக அரசு நடுவர் மன்றம் கோரி மத்திய ஜனசத்தி துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது எந்த அடிப்படையில் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டம் அல்லது சட்டமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் கடிதம் எழுதப்பட்டதா?
என விளக்கமளிக்க வேண்டும். காவிரி குறித்து எந்த ஒரு பிரச்சினையை மேற்கொள்ள வேண்டுமானாலும் அனைத்து கட்சி விவசாயிகள் அமைப்பை கூட்டி முடிவு எடுக்கப்பட வேண்டும்..சட்டத்திற்கு புறம்பாக கடிதம்அல்லது சட்டமன்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட வேண்டும். ஆனால் எந்த கூட்டமும் நடத்தப்படாமல் கலந்து பேசாமல் தன் விருப்பத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு சட்டத்திற்கு புறம்பாக கடிதம் எழுதி உள்ளது.
அதனை தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜய் தலைமையிலான அரசின் 2026 மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் இடை செருகளாக குறுக்கு வழியில் சட்டத்திற்கு புறம்பாக,காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணாக மேகதாட்டிற்கு நடுவர் மன்றம் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு அதனை நியாயப்படுத்த உதயநிதி விரும்புவதின் நோக்கம் என்ன? இது குறித்து தமிழக மக்களுக்கு திமுக விளக்கமளிக்க வேண்டும்..துரோகம் இழைத்ததுபாரத பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது திமுக அரசு சுப்ரீம் கோட்டில் காவிரி உரிமைக்கான வழக்கை திரும்ப பெற்று துரோகம் இழைத்தது. இதனால் தான் கர்நாடகா அரசு ஹேரங்கி, ஹேமாவதி, கபினி போன்ற அணைகளை காவிரியின் குறுக்கே கட்டுவதற்கு வழிவகுத்தது.
பிறகு விவசாயிகள் சார்பில் மன்னார்குடி காவிரி ரெங்கநாதன் சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடர்ந்து நடுவர் மன்றம் கோரினார். அவ்வழக்கில் மீண்டும் திமுக அரசு தன்னையும் இணைத்து கொள்ள கேட்டு கொண்டது..காவிரி நடுவர் மன்றம்சுப்ரீம் கோட்டின் உத்தரவின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்நடவடிக்கை விவசாயிகளை தவிர எந்த ஒரு அரசியல் கட்சிகளும் உரிமை கொண்டாட முடியாது.
தமிழகம் புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் புதிய நீர்த்தேக்கமும் புதிய அணையோ காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் கட்ட முடியாது என காவிரி நடுவர் மன்றமும் சுப்ரீம் கோட்டும் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், நடுவர் மன்றம் கோருவதின் உள்நோக்கத்தை திமுக தனது கொள்கை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்..ஒப்புதல் கடிதம்ஏற்கனவே மேகதாதுவிற்கு மாற்றாக கர்நாடக விவசாயிகளும் தமிழக விவசாயிகளும் அமர்ந்து பேசி ராசி மணலில் அணை கட்டி கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அதனை ஏற்று திமுக ஆட்சியில் 2024-ல் ராசி மணல் அணை கட்டுவதற்கு கொள்கை பூர்வமாக ஏற்று கொண்டு ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளது..இந்நிலையில் 1956 நீர் தாவா சட்டத்தை பயன்படுத்தி நடுவர் மன்றம் கோருவதை நியாயப்படுத்த முயற்சி எடுப்பதை திமுக கைவிட வேண்டும். ஒட்டுமொத்தமாக தமிழக காவிரி உரிமை பறிபோகும் பேராபத்து ஏற்படும்.
ஏற்கனவே பாரத பிரதமராக விபிசிங் இருந்தபோது எந்த ஒரு மாநிலத்திற்கும் சார்பு நிலை இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் சுப்ரீம் கோட்டிற்கு இணையான அதிகாரம் கொண்ட அமைப்பாக காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு இறுதி தீர்ப்பை 2007- ல் வழங்கி உள்ளது..மேலும் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு இடையிலான நீர் தாவா பிரச்சனைகளை தீர்க்க ஆணையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் மட்டுமே சுப்ரீம் கோட்டினால் அமைக்கப்பட்டு நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருவதை நினைவில் கொள்ள வேண்டும். ஆணையத்தின் செயல்பாட்டில் மத்திய அரசோ, கர்நாடக தமிழக அரசுகளோ ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..ஜெயலலிதா2007 ல் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்று தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுக அண்டை மாநிலங்களோடு சமூக உறவை மேற்கொள்ள வேண்டும் என விரும்பி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் 2011 வரை காலங்கடத்தியது.
2012 முதல் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியை கருத்தில் கொண்டு 2013-ல் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடர்ந்து காவிரி உரிமையை மீட்டெடுக்க முயற்சிகளை மேற்கொண்டார்..காவிரி உரிமைகள்அப்போது திமுக தலைவர் கருணாநிதி ஜெயலலிதா காவிரிக்காக அண்டை மாநிலங்களோடு உறவுகளை சீர்குலைக்கிறார். சட்டப்படி நடப்பதால் எந்த பயனும் இருக்காது என விமர்சித்து வந்தார். இந்நிலையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் 2015 ஜனவரியில் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை என் தலைமையில் (பி.ஆர்.பாண்டியன்) கூட்டி இனி சட்டப்படி மட்டுமே தான் காவிரி பிரச்சனையை அணுக வேண்டும்.பேச்சு வார்த்தையோ, அண்டை மாநில உறவுகளோ காவிரி உரிமைகளை மீட்க உதவாது என தெரிவித்தது..அதனை ஏற்று திமுக தலைவர் கருணாநிதி டி கே எஸ் இளங்கோவன் மூலமாக கூட்டத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஒப்புதல் கொடுத்தார்.
திமுக பேச்சுவார்த்தை என்றும் அதிமுக சட்ட நடவடிக்கை என்றும் இரு கருத்துக்கள் நிலவிய நிலையில் சட்டப் போராட்டம் மட்டுமே தீர்வு என்ற ஒத்த கருத்தை உருவாக்கினோம். காவிரி நடுவர் மண்ற இறுதி தீப்பின் அடிப்படையில் நீர் பங்கீட்டு முறையை மாற்ற இயலாது என்று ஒப்புக்கொள்ளும் திமுக,தமிழகம் புதுச்சேரி ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி இல்லை என்று நடுவர் மன்றம் தெளிவுபடுத்தி உள்ளது..புதிய நடுவர் மன்றம்இதனை மூடி மறைத்து புதிய நடுவர் மன்றம் கோர முயற்சிப்பதின் உள்நோக்கம் என்ன என்பதை திமுக தமிழக விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும் தற்போதைய இந்திய அரசியல் சூழலில் உடனடியாக நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு கர்நாடகாவுக்கு ஆதரவான வகையில் மேகதாது அணைக்கட்ட அனுமதிக்கும் பட்சத்தில் திமுக என்ன பதில் சொல்லும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்..அரசிதழில் 2018 ல் வெளியிட்டதுகாவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் நீர் பங்கீட்டு முறையை மாற்ற முடியாது என்று ஒப்புக் கொள்கிற திமுக,புதிய அணை கட்டுவதற்கும் அனுமதி இல்லை என்பதை உணர வேண்டும்.
மேலும் ராசி மணலில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தொடங்குவதற்கு திமுக துணை வரவேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை சில திருத்தங்களுடன் சுப்ரீம் கோட்டில் உறுதிப்படுத்தி உத்தரவிட்ட அடிப்படையில் மத்திய அரசு அரசிதழில் 2018 ல் வெளியிட்டது..இறுதி தீர்ப்புஅன்று முதல் 2033 வரையிலும்15 ஆண்டுகளுக்கு இறுதி தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதை நடுவர் மன்றமும் சுப்ரீம் கோட்டும் உறுதிப்படுத்தி உள்ளதை அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாயிகளும், தமிழக அரசும் நினைவில் கொண்டு செயல்பட முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Reading
Frequently Asked Questions
What is ந ர பங க ட ட ம?
ந ர பங க ட ட ம is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ந ர பங க ட ட ம matter?
ந ர பங க ட ட ம matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
