பிரதமர் மோடிக்கு எதிரான கருத்து.. கார்கே மன்னிப்பு கேட்கவேண்டும்: கர்நாடக பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தல்
ப ரதமர ம ட க க எத - சிவமொக்கா (கர்நாடகா),பிரதமர் மோடி மற்றும் அவரது தந்தைக்கு எதிரான கருத்துகளை கூறியதற்காக மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்கவேண்டும் என
Table of Contents
Hindinewslive247.com – ப ரதமர ம ட க க எத – சிவமொக்கா (கர்நாடகா),பிரதமர் மோடி மற்றும் அவரது தந்தைக்கு எதிரான கருத்துகளை கூறியதற்காக மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்கவேண்டும் என கர்நாடக பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தினார்..பீகார் மாநிலத்தின் முதல் முதலமைச்சரான கிருஷ்ண சிங்கின் 139-வது பிறந்தநாளையொட்டி பாட்னாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு உரையாற்றினார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை காங்கிரஸ் சிறைக்கு அனுப்பும் என்று கார்கே கூறினார்.
அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர் திடீரென இடைமறித்து கூச்சலிட்டு பேசினார். அவர் பேசிய வார்த்தைகளில் ‘மோடி எங்கும் போகமாட்டார்’ என்ற வார்த்தை கார்கேவின் காதில் விழுந்தது. இதனால் டென்ஷன் ஆன கார்கே, “மோடியின் தந்தையாக இருந்தாலும், அவரும் போகத்தான் வேண்டியிருக்கும்” என்று பதிலடி கொடுத்தார்.
அவரது பேச்சு பா.ஜ.க. தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது..காங்கிரசுக்கு விரக்திஇந்நிலையில் கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரா இன்று சிவமொக்காவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-கார்கே பொறுப்பற்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனநிலையை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். நீங்கள் ஏன் இவ்வளவு விரக்தி அடைந்திருக்கிறீர்கள்?
மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் ஆனதை காங்கிரஸ் தலைவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மோடி இந்த உயர்ந்த பதவிக்கு வந்தது காங்கிரஸ் கட்சியோ, ராகுல் காந்தியோ அல்லது கார்கேவோ செய்த உதவியால் அல்ல. மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மோடி, நாட்டைச் சிறப்பாக வழிநடத்தியுள்ளார்..மன்னிப்பு கேட்கவேண்டும்மோடியின் செல்வாக்கு வளர்ந்து வருவதை காங்கிரசால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்புகிறது, வாக்குகள் திருடப்பட்டதாகக் குற்றம் சாட்டுகிறது, தேர்தல் ஆணையத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் குறிவைக்கிறது. அவர்களுக்கு தைரியம் இருந்தால், அவர்கள் மக்களின் நம்பிக்கையை பெற்று அதிகாரத்திற்கு வர முயற்சிக்க வேண்டும்.கார்கே தனது பதவியின் கண்ணியத்தை மதித்து நடந்துகொள்வதுடன், மோடி குறித்தும் அவரது தந்தை குறித்தும் பேசியதற்கு நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் ஏன் மக்களின் நம்பிக்கையை இழந்தனர் என்பதை அக்கட்சி ஆய்வு செய்ய வேண்டும்.
காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, வேறு எவரும் பிரதமராகத் தகுதியற்றவர்கள் என்று காந்தி குடும்பத்தினர் கருதுவதாக தெரிகிறது. அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு மேலும் பின்னடைவு ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Related Reading
Frequently Asked Questions
What is ப ரதமர ம ட க க எத?
ப ரதமர ம ட க க எத is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ப ரதமர ம ட க க எத matter?
ப ரதமர ம ட க க எத matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
