Uncategorized

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: நிலத்தை வாங்கிய வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் நிராகரிப்பு

பழன க வ ல ந ல ம - மதுரை ஐகோர்ட்டு, பழன க வ ல ந ல ம - மதுரை ஐகோர்ட்டு, பழனி கோவில் நில முறைகேடு தொடர்பான வழக்கில் வெள்ளத்துரை தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை

Desk Uncategorized
Published जुलाई 22, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Barbara Anderson - hindinewslive247.com

வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் நிராகரிப்பு

Hindinewslive247.com – பழன க வ ல ந ல ம – மதுரை ஐகோர்ட்டு, பழன க வ ல ந ல ம – மதுரை ஐகோர்ட்டு, பழனி கோவில் நில முறைகேடு தொடர்பான வழக்கில் வெள்ளத்துரை தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இவர் பழனியில் நடந்த ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

வழக்கின் பின்னணி

இந்த வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஐகோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. மேலும், அந்த பத்திரப்பதிவு செல்லாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வெள்ளத்துரையின் விளக்கம்

மனுவில் வெள்ளத்துரை கூறியதாவது:

எனக்கு பழனியை அடுத்த பாப்பான்குளம் சொந்த ஊராகும். சமீபத்தில் எனக்கு சொந்தமான சொத்தை சுமார் ரூ.2 கோடிக்கு விற்றேன். இந்தத் தொகையை வங்கிகளில் வைப்புத்தொகையாக முதலீடு செய்ய முடிவு செய்தேன். ஆனால் அவ்வாறு செய்தால் பெரும் தொகையை வருமானவரியாக செலுத்த நேரிடும். ஒரு சொத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை மற்றொரு சொத்து வாங்கி முதலீடு செய்வதுதான் நல்லது என்று எனது ஆடிட்டர் ஆலோசனை தெரிவித்தார். அவரது ஆலோசனையின் பேரில் நிலம் வாங்குவது என முடிவு செய்து விசாரித்தேன்.

அந்த சமயத்தில்தான் பழனி மலை அடிவாரத்தில் உள்ள நிலம் விற்பனைக்கு வந்ததை தெரிந்து கொண்டேன். ஆவணங்களை சரிபார்த்த போது நிலம் சம்பந்தமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த நிலத்தை வாங்க ஒப்புக்கொண்டேன்.

தொடக்கத்தில் இந்த நிலத்தின் ஆவணங்கள் போலி என்று கூறி பத்திரப்பதிவு செய்ய மறுத்தனர். இதனால் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்று அதன் பிறகு இந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து அதன் உரிமையைப் பெற்றேன். இதைத் தவிர வேறு எதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

நான் வசதியாக வாழ்வதற்கு தேவையானதை விட அதிகமாகவே என்னிடம் வசதி வாய்ப்புகள் உள்ளன. இப்போது இந்த சொத்து பத்திரப்பதிவு ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், என்னிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை. நான் உழைத்து சேர்த்த பணத்தை செலுத்தி இந்த நிலத்தை வாங்கினேன். எனவே இதற்காக நான் செலுத்திய தொகையை விற்பனையாளரிடம் இருந்து மீட்கும் நிலையில் இருக்கிறேன்.

நிலத்தின் மதிப்பு மற்றும் குற்றச்சாட்டு

1 ஏக்கர் 40 சென்ட் பரப்பளவுள்ள இந்த நிலம், பழனி முருகன் கோவில் தேவஸ்தானத்திற்குச் சொந்தமானது என்றும், அதன் மதிப்பு 100 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த நிலம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிலத்தை மோசடி செய்யும் நோக்கத்தில் பத்திரப்பதிவு செய்ததாக பொய்யான குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் என்னை சிக்க வைத்து இருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என வெள்ளத்துரை மனுவில் தெரிவித்திருந்தார்.

விசாரணை மற்றும் முடிவு

இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரை ஒரு தரப்பாக சேர்க்கிறோம். அவர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, பழன க வ ல ந ல ம – மதுரை ஐகோர்ட்டு, பழனி கோவில் நில முறைகேடு வழக்கில், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளத்துரை முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment