உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சிந்து முதல் சுற்றில் அயர்லாந்து வீராங்கனையை எதிர்கொள்கிறார்
Hindinewslive247.com – உலக ப ட ம ண டன ச – வரும் 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை டெல்லியில் உள்ள இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் 30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. 2009-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் இந்த கவுரவமான போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். உலகின் முன்னணி வீரர்கள் அனைவரும் பங்கேற்கும் இப்போட்டி கடும் சவால்களைக் கொண்டிருக்கிறது.
குலுக்கல் மூலம் நேற்று முடிவு செய்யப்பட்ட ஜோடிப்போட்டிகளின்படி, பெண்கள் ஒற்றையரில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து, 141-வது நிலையில் உள்ள அயர்லாந்து வீராங்கனை சோபியா நோபிளுடன் முதல் சுற்றில் மோதுகிறார். சிந்து இதுவரை உலக பேட்மிண்டனில் 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 2019-ம் ஆண்டில் அவர் தங்கம் வென்றதும் இதில் அடங்கும். சொந்த மண்ணில் ஆடுவதால் மீண்டும் பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
மற்ற போட்டியாளர்கள் மற்றும் ஜோடிகள்
நம்பர் ஒன் வீராங்கனையும் ஒலிம்பிக் சாம்பியனுமான தென்கொரியாவின் அன்சே யங், முதல் ரவுண்டில் பல்கேரியாவின் கலோயானா நல்பன்டோவாவுடன் மோதுகிறார். கணிப்புப்படி அரைஇறுதியில் சிந்து, அன்சே யங்கை சந்திக்க வேண்டி இருக்கலாம். மற்றொரு இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, தெட் ஹிதர் துஜாருடன் (மியான்மர்) களம் காண்கிறார்.
ஆண்கள் ஒற்றையரில் இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டிக்கு முதல் ரவுண்டே கடினமானது. அவர் நம்பர் ஒன் வீரரும் நடப்பு சாம்பியனுமான சீனாவின் ஷியுகியுடன் மல்லுகட்டுகிறார். உலக பேட்மிண்டனில் பதக்கம் வென்றவரான லக்ஷயா சென், முதல் சுற்றில் ஆஸ்திரியாவின் காலின்ஸ் வாலென்டின் பிலி மோனுடன் மோத உள்ளார்.
இரட்டையரில் ‘பை’ சலுகை பெற்றுள்ள இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகிறது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஸ்பெயினின் பாலா லோப்ஸ், லூசியா ரோட்ரிக்ஸ் கூட்டணியை எதிர்கொள்கிறது.
அரங்க மேம்பாடு மற்றும் பயிற்சியாளர் கருத்துகள்
நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் சங்க செயலாளர் சஞ்சய் மிஸ்ரா பேசுகையில், ‘உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்காக அரங்கத்தை முழுமையாக மறுவடிவமைப்பு செய்யவும், மேம்படுத்தவும் சுமார் ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது’ என்றார்.
இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், “பேட்மிண்டனில் ஒரு நாடாக இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. பதக்கம் வெல்லும் திறன் கொண்ட பல வீரர்கள் நம்மிடம் உள்ளனர். பல முன்னணி வீரர்களின் வருகையால் இந்த போட்டி கடும் சவாலாக இருக்கும் என்றாலும், உள்ளுர் சூழல் மற்றும் ரசிகர்களின் ஆதரவுடன் இந்திய வீரர்கள் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்கள். ஒற்றையர் மற்றும் இரட்டையர் இரண்டிலும் நமக்கு பதக்கம் வெல்ல வாய்ப்பிருப்பதாக நம்புகிறேன்.”
அவர் தொடர்ந்து, “பி.வி.சிந்து சமீபத்தில் ஜப்பான் ஓபனில் மகுடம் சூடினார். உன்னதி ஹூடா சாதகமான போட்டி அட்டவணையை பெற்றுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள சாத்விக் மற்றும் சிராஜ் நல்ல பார்மில் உள்ளனர். லக்ஷயா சென்னுக்குரிய சுற்று கடினமானது. அவர் 3-வது ரவுண்டில் முன்னாள் உலக சாம்பியன் குன்லாவுத் விதித்சரணை (தாய்லாந்து) எதிர்கொள்வதற்கான சாத்தியம் உள்ளது. ஆனால் லக்ஷயா சென் முன்னணி வீரர்களுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதே போல் ஆயுஷ் ஷெட்டி கவனிக்கத்தக்க வீரர்களில் ஒருவராக இருப்பார். மொத்தத்தில் இந்திய பேட்மிண்டனின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்றார்.
Related Reading
Frequently Asked Questions
What is உலக ப ட ம ண டன ச?
உலக ப ட ம ண டன ச is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does உலக ப ட ம ண டன ச matter?
உலக ப ட ம ண டன ச matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
