நீதிமன்ற உத்தரவை மீறி ஊடகங்களில் பேசியதற்கு மன்னிப்பு கோரிய நடிகர் ரவி மோகன்
ந த மன ற உத தரவ ம – நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன் பின்பு, மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து வழங்குவதற்கான மனுவை ரவி மோகன் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இறுதி தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் அவதூறு அல்லது தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், ரவி மோகனின் தோழி பாடகி கெனிஷா பிரான்சிஸ், ஆர்த்தி ரவி குறித்து அவதூறு கருத்துகளை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் போது, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எந்த ஊடகத்திலும் ஆர்த்தி ரவிக்கு எதிராக கருத்து தெரிவிக்கக்கூடாது என கெனிஷாவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர், அவருடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக கெனிஷா அறிவித்திருந்தார்.
“சாதுவா இருந்த என்னை நிறைய பேர் சீண்டலாம் என நினைக்கிறார்கள். இத்தனை நாள் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம். விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. 23 வருடம் இரவு பகலாக உழைத்துள்ளேன். என்னுடைய 90% படங்கள் வெற்றியடைந்துள்ளன. என் குடும்பத்திறக்காக நான் இருக்கிறேன். என் குழந்தைகளை பார்க்க விடவில்லை”
கடந்த மே 16-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரவி மோகன், தான் தன் வாழ்க்கையை கெடுத்தார் என்றும், தனது மகன்களை பார்க்க விடவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ரவி மோகனின் செயலுக்கு மன்னிப்பு கோரி பொது அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் போது, மனவேதனை அடைந்த அனைவருக்கும் தனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
அவர் மனுதாக்கல் செய்திருந்தார். சென்னை ஐகோர்ட்டு உத்தரவு மீறி ரவி மோகன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதாக ஆர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக
