80ஆவது சுதந்திர தினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து
சுதந்திர தின விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை
Hindinewslive247.com – தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய நாடு அதன் 80வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான நேரத்தில், அனைத்து மக்களுக்கும் கட்சியின் சார்பில் புரட்சிகர நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தியாகிகளுக்கு வீரவணக்கம்
தண்ணீர்விட்டோம் வளர்த்தோம், இப்பயிரை கண்ணீராற் காத்தோம்
மகாகவி பாடிய இந்த வரிகளுக்கு ஏற்ப, சுதந்திர காற்றை நாம் சுவாசிக்க இன்னுயிர் தியாகம் செய்த வீரர்கள் அனைவருக்கும், சிறைக்கொட்டடி மற்றும் சித்ரவதைகளை இன்முகத்தோடு எதிர்கொண்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் உரித்தாகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்களிப்பு
முழு விடுதலை என முதலில் முழங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள் தான். இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், மொழிவழி மாநிலங்களே தீர்வு என முன்மொழிந்தது கம்யூனிஸ்ட் இயக்கமே. சுதந்திர போராட்டத்தோடு மண்ணுரிமை, பெண்ணுரிமை, தொழிலாளர் வர்க்க உரிமைகள், தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டம், சமூக நீதி மற்றும் சம நீதி போன்றவற்றை இணைத்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.
அரசியல் சூழல் மீதான விமர்சனம்
விடுதலை போராட்டத்திலிருந்து விலகி நின்ற மத வெறி சக்திகளின் வாரிசுகளிடம் மத்திய மற்றும் பல மாநிலங்களின் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத இந்த கூட்டம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை திட்டமிட்டு சிதைத்து வருகிறது. அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் அழிக்கப்படுகின்றன.
பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைமாற்றி தரப்படுகின்றன. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி விடுதலை பெற்ற நமது நாட்டின் சுயேட்சையான அயல்துறை கொள்கை கைகழுவப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடிபணிவதாக மாற்றப்பட்டுள்ளது.
மோடி அரசு மீதான குற்றச்சாட்டுகள்
உப்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள் அன்று நம் முன்னோர்கள். இன்று விவசாயிகளின் விதை உரிமையை கூட பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்கிறது மோடி அரசு. வேலையின்மை, வறுமை, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு முடிவு காணப்படவில்லை. தேசத்தின் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வரைவை முடக்க மோடி அரசு சதி செய்கிறது.
இளைஞர் - மாணவர் போராட்டம்
போராட்டங்களின் வழியாகவே சாதிக்க முடியும் என்பதற்கு சமீபத்திய சாட்சியமாக டெல்லி துவங்கி நாடு முழுவதும் நடந்த இளைஞர் - மாணவர் போராட்டம் திகழ்கிறது. விடுதலை போராட்ட தியாகிகளின் கனவுகளை நனவாக்கவும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற சமத்துவ சமூகத்தை உருவாக்கிடவும் விடுதலை நாளில் உறுதியேற்போம்.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன்ற விழுமியங்களை கொண்ட அரசியல் சட்டத்தை பாதுகாக்க விடுதலை நாளில் உறுதியேற்போம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Reading
Frequently Asked Questions
What is 80ஆவத ச தந த ர த னம?80ஆவத ச தந த ர த னம is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does 80ஆவத ச தந த ர த னம matter?80ஆவத ச தந த ர த னம matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.