HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

வாழ்க்கையில் யாருக்குதான் “துரோகம்” நடக்கவில்லை? – இசையமைப்பாளர் டி.இமான்

Published जुलाई 31, 2026 · Updated अगस्त 2, 2026 · By Mary Garcia - hindinewslive247.com

Foto : Mary Garcia - hindinewslive247.com

வாழ்க்கையில் துரோகம் அனைவருக்கும் நடக்கும் – இசையமைப்பாளர் டி.இமான்

Hindinewslive247.com – வ ழ க க ய ல ய - சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 'நிறம்' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் டி.இமான் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துரோகம் பற்றி பேசினார். "எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் துரோகம் நடக்கிறது. அது எவருக்கும் நடக்காமல் போகாது" என்று அவர் தெரிவித்தார்.

நிறம் படம் பற்றிய தகவல்கள்

பலராம்கிருஷ்ணா இயக்கத்தில் கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரித்த 'நிறம்' படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரீத்தி அஸ்ரானி, தன்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளனர். இந்தப் படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.

விழாவில் நடிகர் முகேன் ராவ், நடிகை தான்யா, இசையமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் துரோகம் பற்றி பா.விஜய் எழுதியுள்ள பாடல் அனைவருக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது என்று டி.இமான் கூறினார்.

தேசிய விருது சர்ச்சை குறித்து டி.இமான்

தேசிய விருது என்பது அந்தப் படைப்பிற்கான அங்கீகாரமாக சில நேரங்களில் சரியாக இருக்கலாம். சில நேரங்களில் தவறுகளும் நடந்திருக்கலாம். ஆனால், ஒரு கலைஞர் எங்கிருந்து வந்தார்? திரைத்துறையில் தனது இடத்தை நிலைநிறுத்த கொடுத்த உழைப்பு என்ன? என்பதையும் கருத்தில் கொண்டு பல விஷயங்கள் நடைபெறுகின்றன. அதுவே முக்கியம் என்று நான் கருதுகிறேன்.

தேசிய விருது தகுதியானதா, தகுதியற்றதா என்ற விவாதத்திற்கு எப்போதும் மாற்றுக் கருத்துகள் இருந்து கொண்டே இருக்கும். அதையெல்லாம் தாண்டி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று டி.இமான் கூறினார்.

தமிழ் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தேசிய அளவில் சாதனை படைத்து விருது பெறும் போது, அதை நம் மாநிலத்தின் பெருமையாகவே கருத வேண்டும். இந்தப் படத்திற்கு விருது கிடைக்கவில்லை, அந்தப் படத்திற்கு கிடைக்கவில்லை என்று மட்டும் பார்க்காமல், அந்தப் படங்கள் முறையாக தேர்வுக் குழுவிடம் அனுப்பப்பட்டதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தகுதியான பல படங்கள் இருந்தாலும், அவை சரியான முறையில் தேர்வுக் குழுவைச் சென்றடையாமல் இருக்கலாம். தேசிய விருதுகள் பொறுத்தவரை பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, தேர்வுக் குழுவினரை மட்டும் குறை கூறுவது சரியான அணுகுமுறை அல்ல என்று அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் டி.இமான் பேச்சு

இசையமைப்பாளர் டி.இமான் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் அதிகம் கவனம் பெற்று வருகிறது. அதற்கு முக்கிய காரணம் சில வருஷத்துக்கு முன்பு அவர் கொடுத்த ஒரு பேட்டிதான். "எனக்கு மிகப்பெரிய துரோகம் நடந்திருக்கிறது, அதை செய்தது சிவகார்த்திகேயன்" என்று இமான் கூறியிருந்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இப்போது மீண்டும் அவர் துரோகம் பற்றி பேசியது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.