HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

முதல்-அமைச்சருக்கு எதிராக அவதூறு பேச்சு; பகிரங்க மன்னிப்பு கேட்க அமைச்சர் ஜெகதீஸ்வரி வலியுறுத்தல்

Published अक्टूबर 19, 2026 · Updated अक्टूबर 19, 2026 · By Karen Martinez - hindinewslive247.com

Foto : Karen Martinez - hindinewslive247.com

Hindinewslive247.com – ம தல அம ச சர க க - சென்னைமுதல்-அமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசியவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி வலியுறுத்தி உள்ளார்.தமிழக முதல்-அமைச்சரை பற்றி அவதூறாக பேசிய சம்பவம் தொடர்பாக தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதுபற்றி அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவு ஒன்றில், தமிழக முதல்-அமைச்சரை பொதுமேடையில் அவமரியாதையாக பேசுவதும், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதும் ஜனநாயக மாண்புகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் எதிரான செயலாகும்..

தமிழக முதல்-அமைச்சரை பற்றி அவதூறாகவும், இழிவாகவும் பேசியவர்களின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இத்தகைய தரக்குறைவான பேச்சுகளில் ஈடுபட்டவர்கள் தங்களது தவறை உணர்ந்து, தமிழக முதல்-அமைச்சரிடமும் தமிழக மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.மக்களின் தீர்ப்புமுதல்-அமைச்சரைப் பற்றி இழிவாகப் பேசப்பட்ட வேளையில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி @KanimozhiDMK, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா @PriyarajanDMK ஆகியோர் மேடையில் சிரித்துக் கொண்டிருந்தது பொறுப்பான பொது வாழ்வுக்கு ஏற்ற செயலல்ல.

இத்தகைய அணுகுமுறை அரசியல் நாகரிகம் மற்றும் பொதுவாழ்வின் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.. தொடர்ந்து இத்தகைய அவதூறான பேச்சுகளில் ஈடுபடுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும். தேர்தல்களில் மக்களின் தீர்ப்பை அரசியல் கட்சிகள் மதித்து, தங்களது செயல்பாடுகளைச் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மக்களின் ஆதரவை பெறுவதற்கு அவதூறுப்பேச்சுகள் அல்ல, கண்ணியமான அரசியலும் பொறுப்பான செயல்பாடுகளுமே அவசியம்.பகிரங்க மன்னிப்புஅரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தனிநபர் அவமதிப்பும் தரக்குறைவான பேச்சும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்களது பேச்சிலும் செயலிலும் பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்..

எனவே, தமிழக முதல்-அமைச்சரை அவதூறாகவும் இழிவாகவும் பேசியவர்கள் தங்களது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அரசியல் நாகரிகத்தையும் பொதுவெளியின் கண்ணியத்தையும் காப்பது அனைவரின் கடமையாகும் என தெரிவித்து உள்ளார்.

Related Reading

Frequently Asked Questions

What is ம தல அம ச சர க க?

ம தல அம ச சர க க is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ம தல அம ச சர க க matter?

ம தல அம ச சர க க matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.