HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

மழைக்கே ‘லீவ்’ கேட்டு குமரி, நெல்லை கலெக்டர்களின் வலைதளங்களில் செல்லமாக மிரட்டிய பள்ளி மாணவர்கள்

Published अक्टूबर 26, 2026 · Updated अक्टूबर 26, 2026 · By Mary Garcia - hindinewslive247.com

Foto : Mary Garcia - hindinewslive247.com

Hindinewslive247.com – மழ க க ல வ க ட - நாகர்கோவில்/நெல்லை,தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களான கன்னியாகுமரி மற்றும் நெல்லையில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையை கண்டாலே பள்ளிக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு வீட்டில் முடங்க நினைக்கும் இன்றைய ‘ஜென்-ஜி’ மாணவர்கள், விடுமுறை வேண்டி மாவட்ட கலெக்டர்களை இன்ஸ்டாகிராமில் முற்றுகையிட்டு வரும் சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன..“நீங்களும் ஒருகாலத்துல ஸ்டூடண்ட் தானே சார்!”: குமரி கலெக்டரை உருக வைத்த மாணவர்கள்!.இன்ஸ்டாகிராமில் டேக்கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வரும் சூழலில், பள்ளிக்கு செல்ல விரும்பாத குறும்புக்கார மாணவர்கள் சிலர் மாவட்ட கலெக்டர் பிரதாப்பை இன்ஸ்டாகிராமில் டேக் செய்து மெசேஜ்களைத் தட்டிவிட்டுள்ளனர்..சென்டிமென்ட் பதிவுஅதில் சிலர் ஒருபடி மேலே போய், “சார்.. நீங்களும் ஒருகாலத்துல மாணவர் தானே, உங்களுக்கு எங்களோட வலி தெரியாதா?

ப்ளீஸ் லீவ் விடுங்க!” என தங்களது பாணியில் உருக்கமாக கேட்டு சென்டிமென்டாக பதிவிட்டுள்ளனர்..சோக மியூசிக்குடன் கலெக்டரின் ‘ரீல்ஸ்’ஆனால், மழையின் அளவைக் துல்லியமாகக் கணக்கிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கலெக்டர் பிரதாப் கனிவுடன் மறுத்துவிட்டார். அத்துடன் நிறுத்தாமல், மாணவர்கள் தனக்கு அனுப்பிய மெசேஜ்களை எல்லாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, பின்னணியில் ஒரு சோகமான மியூசிக்கைப் போட்டு, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோவாக பதிவிட்டு மாணவர்களுக்கு கலகலப்பான பதிலடி கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது..மஞ்சள் நிற எச்சரிக்கைஇதேபோல், நெல்லை மாவட்டத்திலும் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இன்று அதிகாலை முதலே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற ஏக்கத்தில் மாணவ-மாணவிகள் காத்திருந்தனர்..வாட்ஸ்-அப்பொறுமை இழந்த சில மாணவர்கள், நெல்லை மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகனின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பத் தொடங்கினர்.

அதில் ஒரு மாணவர், “விடுமுறை விடாவிட்டால் எங்கள் மீது உங்களுக்கு அக்கறையே இல்லை” என்று பதிவிட்டுள்ளார்..தோற்றுவிட்டீர்கள் சார்மற்றொரு மாணவரோ , “நீங்கள் ஒரு மனிதனாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், மாவட்ட கலெக்டராகவும் தோற்றுவிட்டீர்கள் சார்” என்று செல்லமாக கண்டித்து மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த சுவாரசியமான மெசேஜ்களையும் நெல்லை கலெக்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்..மாறிய ட்ரெண்ட்ஒரு காலத்தில் ரேடியோவிலும், தொலைக்காட்சியிலும் கலெக்டர் எப்போது விடுமுறை அறிவிப்பார் என காத்துக்கிடந்த மாணவர்கள், இன்று நேரடியாக கலெக்டரின் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-அப்பிற்கே சென்று ‘லீவ்’ கேட்கும் இந்த சுவாரசியமான ட்ரெண்ட், ஒட்டுமொத்த சமூக வலைதள உலகையே சிரிக்க வைத்துள்ளது.

Related Reading

Frequently Asked Questions

What is மழ க க ல வ க ட?

மழ க க ல வ க ட is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does மழ க க ல வ க ட matter?

மழ க க ல வ க ட matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.