Uncategorized

பள்ளி மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை: பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்

பள ள மத ப ப ண அட - தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், கால்நடை மருத்துவ அறிவியல்

Desk Uncategorized
Published अगस्त 7, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Untitled-4-2
Foto : Michael Jones - hindinewslive247.com
Table of Contents
  1. பள்ளி மதிப்பெண்ணில் கால்நடை மருத்துவ சேர்க்கை கோரிக்கை
  2. Related Reading
  3. Frequently Asked Questions

பள்ளி மதிப்பெண்ணில் கால்நடை மருத்துவ சேர்க்கை கோரிக்கை

Hindinewslive247.com – பள ள மத ப ப ண அட – தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் அல்லாமல், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இந்த முன்மொழிவு, மாநிலத்தின் கல்வி முறைக்கு ஏற்ப அமையும் வகையில் அமைந்துள்ளது.

இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலின் பரிந்துரைகள்

இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984-ன் விதிமுறைகளின்படி, அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வின் (Common Entrance Examination) அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறை மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

அதற்கு மாற்று ஏற்பாடாக, மேற்படி 2026-27 கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில், நீட் (NEET UG-2026) தேர்வின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில், மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருப்பது தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முன்மொழிவு, தமிழ்நாடு மாநிலத்திற்குப் பல்வேறு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் வரலாற்றுப் பின்னணி

கால்நடை மருத்துவக் கல்வியானது தமிழகத்தின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல, மாறாக, மாநிலத்தின் கால்நடை பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பால்வள மேம்பாட்டினை வலுப்படுத்துவதற்கும், லட்சக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குமான நமது முயற்சிகளின் அடித்தளமாகும் என்றும், இன்று கால்நடை மருத்துவக் கல்வியில் சேர்க்கை பெறும் மாணவர்களே, வரும் ஆண்டுகளில் நமது விவசாயிகளுக்கும், கிராமங்கள் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைக்கும் சேவை செய்யும் கால்நடை மருத்துவர்களாகவும் உருவெடுக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை முறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இந்த முறையானது (Model), திறமையான தொழில்முறை வல்லுநர்களைத் தொடர்ந்து உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு, உயர்கல்வியைப் பெறுவதற்கான நியாயமான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. இத்தேர்வு முறை, சமூக நீதி, பிராந்திய சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு பயனுள்ள கருவியாகச் செயல்பட்டுள்ளது என்றும் முதல்-அமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தொடர்பான கவலைகள்

2007-2008ம் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு அரசு, தொழிற்கல்விப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது என்றும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட பல திறமையான மாணவர்களுக்கு நுழைவு நிலையில் பெரும் தடைகளை நீட் (NEET) உள்ளிட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்துகின்றன என்பதை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றும் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியத் தேர்வுகள் முகமை (NTA), நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதையும், அண்மையில் சில முறைகேடுகள் காரணமாக, தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு மேற்படி முகமை ஆளான நிலையில், 2024-ம் ஆண்டில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மையப்புலனாய்வுத் துறையின் விசாரணைக்கும் வழிவகுத்தன என்பதையும் கருத்தில்கொண்டு, கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளிப் படிப்பின் மூலம் வெளிப்படும் தகுதியை பிரதிபலிப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பயிற்சிக்கான வாய்ப்புகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பலமுறை தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் பெறப்படும் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்ற எண்ணத்தை சமீபத்திய ஆண்டுகளின் அனுபவங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன என்று தெரிவித்து, இத்தகைய நடைமுறையைக் கால்நடை மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கும் விரிவுபடுத்துவது என்பது, அதைப் போன்ற பாதிப்புகளையே ஏற்படுத்தும் என முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை முறை என்ன மாறுகிறது? தற்போதைய பொது நுழைவுத் தேர்வு முறையிலிருந்து, மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற வேண்டுமென முதல்-அமைச்சர் கோரியுள்ளார்.

நீட் தேர்வு ஏன் பொருத்தமற்றது என்று கருதப்படுகிறது? நீட் தேர்வுகளில் சிறப்புப் பயிற்சி, நிதி ஆதாரங்கள் மற்றும் பலமுறை தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம் தமிழ்நாட்டிற்கு எப்படி உதவும்? தமிழ்நாடு பல தசாப்தங்களாக மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் அடிப்படையில் தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையைப் பின்பற்றி வருகிறது. இந்த முறை கிராமப்புற மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு நியாயமான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.

Frequently Asked Questions

What is பள ள மத ப ப ண அட?

பள ள மத ப ப ண அட is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does பள ள மத ப ப ண அட matter?

பள ள மத ப ப ண அட matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment