Uncategorized

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்: மாற்றமா?, தடுமாற்றமா?

த வ க அரச ன ம தல - தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று 88 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர்களின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Desk Uncategorized
Published अगस्त 7, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Michael Jones - hindinewslive247.com
Table of Contents
  1. த.வெ.க.வின் முதல் பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் மற்றும் சவால்கள்
  2. Related Reading
  3. Frequently Asked Questions

த.வெ.க.வின் முதல் பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் மற்றும் சவால்கள்

Hindinewslive247.com – த வ க அரச ன ம தல – தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று 88 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர்களின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்களித்த மக்கள் ‘ஆட்சி’ மாறினால் ‘காட்சி’ மாறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த எதிர்பார்ப்புடன் தான் த.வெ.க.விற்கு ஆட்சியை வழங்கியுள்ளனர். நேற்று முன்தினம் பொது பட்ஜெடும், நேற்று வேளாண் பட்ஜெடும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் வாக்குறுதிகள்: நிறைவேற்றப்பட்டதா?

பட்ஜெட் தாக்கலுடன் மக்கள் மனதில் எழும் முக்கிய கேள்வி என்னவென்றால், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதே ஆகும். த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் ஊழல் ஒழிப்புக்கு முன்னுரிமை அளித்தது. ஆனால், எதிர்கால திட்டமிடலுடன் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இது எவ்வளவு எதிரொலித்தது என்பது கேள்விக்குறி.

பெண்களுக்கான அறிவிப்புகளில் சில மாற்றங்கள் தெரிகின்றன. மணப்பெண்ணுக்கு 1 பவுன் தங்கமும், பட்டுச்சேலையும் வழங்குவது, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது போன்றவை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. ஆனால், மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும், ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் இடம்பெறவில்லை. இந்த இரண்டு அறிவிப்புகளையும் மிகவும் எதிர்பார்த்த பெண்களுக்கு சற்று ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடன் சுமை: குடும்பத்தின் தலையில் ரூ.4.80 லட்சம்

பட்ஜெட் அறிவிப்புகளைப் பொறுத்தவரை முந்தைய ஆட்சியாளர்களிடம் இருந்து சற்று மாற்றம் ஏற்பட்டதுபோல் தெரிகிறது. ஆனால், நிதி மேலாண்மையைப் பொறுத்தவரை தடுமாற்றத்தைக் காட்டுவதாகவே தெரிகிறது. தமிழக அரசின் தற்போதைய கடன் அளவு ரூ.10.98 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் என்ற அளவில் கடன் சுமை உள்ளது.

இதுமட்டுமல்லாமல், இந்த நிதி ஆண்டில் (2026-27) ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடி கடன் பெற திட்டமிடப்பட்டிருப்பதாகவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, வாங்கிய கடனுக்கு ஆண்டுதோறும் அதிக அளவில் வட்டி கட்டப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மட்டும் ரூ.78,683 கோடி வட்டி கட்டப்பட உள்ளது. இந்த வட்டித்தொகை அடுத்த நிதியாண்டில் (2027-28) ரூ.89,698 கோடியாகவும், 2028-29-ம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 256 கோடியாகவும் உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நிதிநிலையை சீரமைக்க 2 ஆண்டுகள் தேவைப்படும் – நிதி அமைச்சர் மரிய வில்சன்

அதாவது, கடன் வாங்கும் அளவு குறையப்போவதில்லை என்பதையே இது காட்டுகிறது. தமிழக பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடிக்குத்தான் போடப்படுகிறது. வரவு அதைவிட குறைவாக இருப்பதால், பற்றாக்குறை அதிகரிக்கிறது. அதை சமாளிக்க கடன் வாங்கப்படுகிறது. த.வெ.க. அரசின் கடந்த 3 மாதகால ஆட்சியில் மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கடன் 50 ஆண்டுகள் கடந்தாலும் இருந்து கொண்டேதான் இருக்கும். அதை குறைக்க முடியாது – நிதித்துறை செயலாளர் சித்திக்

கடன் அளவு குறையாதா?

அப்படி என்றால், இனி தமிழ்நாட்டின் கடன் அளவு குறையவே குறையாதா? ஒவ்வொருவரும் கடன் சுமையுடன் தான் அழைய வேண்டுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடன் வாங்கும் அளவை குறைக்க வேண்டும் என்றால், செலவை குறைக்க வேண்டும். ஆனால், கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளைப் போல், த.வெ.க. அரசும் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருப்பதால், அதை நிறைவேற்றும்போது செலவு அதிகரிக்கத்தான் செய்யும்.

வருவாயை பெருக்க முடியாதா?

வரியை உயர்த்த வேண்டும் என்றாலும், பெரும்பாலான வரிகள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வருவதால், மத்திய அரசால் மட்டுமே வரி உயர்வை கொண்டுவர முடியும். சொத்து வரி, மின் கட்டணம், பஸ் டிக்கெட் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவற்றை மாநில அரசே உயர்த்த முடியும் என்றாலும், மக்கள் மத்தியில் எதிர் வினைகளை உருவாக்கும் என்பதால், அதற்கு ஆட்சியாளர்கள் முன்வருவது கடினம். தற்போதைய நிலையில், தமிழக அரசால் மதுபானத்துக்கான வரி, வணிக வரி உள்பட ஒருசில இடங்களில் மட்டுமே வரிகளை மாற்றியமைக்க முடியும்.

அரசின் தேவையைப் பார்க்கும்போது, இதுபோன்ற இடங்களின் வரியை உயர்த்தினாலும், பெரிய அளவில் கைகொடுக்காது. எனவே, த.வெ.க. அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் மட்டும் சுமார் ரூ.9 லட்சம் கோடி கடன் வாங்கும் நிலையே உள்ளது. நடப்பாண்டில் மட்டும் ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் கோடி கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

Frequently Asked Questions

What is த வ க அரச ன ம தல?

த வ க அரச ன ம தல is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does த வ க அரச ன ம தல matter?

த வ க அரச ன ம தல matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment