தூத்துக்குடியில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க ஒப்பந்தம்
த த த க க ட ய – தமிழ்நாடு அரசும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) நிறுவனமும் தூத்துக்குடி மாவட்டத்தில் அல்லிக்குளத்தில் விண்வெளி உற்பத்தி தொழிற்பூங்காவில் “விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் (CTF)” அமைப்பதற்காக ஒப்பந்தம் கையெழுத்திட்டனர். இந்த சிறப்புமிக்க ஒப்பந்தத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜயிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வு, குஜராத்தில் நடைபெற்ற 10-வது இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) தொழில் மாநாட்டின்போது நடைபெற்றது.
மைல்கல்
இந்த ஒப்பந்தம், தமிழ்நாட்டில் விண்வெளி உற்பத்திக்கான உலகத்தர சூழலை உருவாக்கும் தொழில் துறை முயற்சிக்கு முக்கிய மைல்கல் என கருதப்படுகிறது. அதிநவீன சோதனை மற்றும் தரநிலை உறுதிப்படுத்தும் வசதிகளை வழங்கும் இந்த மையம், ஏவுகணை வாகன கூறுகள், செயற்கைக்கோள் அமைப்புகள், இயக்க அமைப்புகள் மற்றும் பிற முக்கிய விண்வெளி உபகரணங்களின் உற்பத்தி மற்றும் சோதனைக்கு உதவும். மேலும் தொழில்துறையின் செலவும் நேரமும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம் பற்றிய விவரம்
இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) நிறுவனம், இந்த மையத்திற்கான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள உபகரணங்களை வழங்கும். தமிழ்நாடு அரசு, தேவையான நிலத்தை வழங்கி கட்டடங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தும். இந்த வசதி, இந்தியாவின் முன்னணி விண்வெளி உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டு முயற்சி, தமிழ்நாடு அரசின் நோக்கத்தை மேலும் தெளிவுபடுத்துகிறது. இந்தியாவின் முன்னணி விண்வெளி உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்கும் கனவிற்கு முக்கிய பங்களிப்பாக விளங்கும். இது உலக விண்வெளி உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை கொண்டார்கள் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தெரிவித்தார்.
இந்த வசதி, நாடு முழுவதும் இந்த துறை சார்ந்த தொழில்களுக்கு உலகத்தர சேவைகளை பெற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
