திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது
Hindinewslive247.com – த ம க ம ன ன ள – சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டு, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியை செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசிய வழக்கில் இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியபோது, சைவ மற்றும் வைணவ சமயங்கள் பற்றியும், பெண்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். இந்த சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கு எதிராக, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், வெறுப்பு பேச்சு வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த புகார் மனு, எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளது.
ஐகோர்ட்டு உத்தரவு மற்றும் வழக்கு தள்ளுபடி
தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அனுப்பிய சம்மன் மற்றும் வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வழக்கை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை ஐகோர்ட்டு நீக்கி இருப்பதாகவும், ஆறு மாதத்தில் விசாரணை முடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதாகவும் மனுதரார் உமா ஆனந்த தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
பிடிவாரண்ட் பிறப்பிப்பு
இந்த வழக்கு இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர், வழக்கில் இன்று ஆஜராவதிலிருந்து விளக்கு அளிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி, வழக்கில் இன்று ஆஜராதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதாக உத்தரவிட்டார்.
சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது. பொன்முடியை செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த காவல் துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டு உத்தரவிடுகிறது என கூறி வழக்கு விசாரணை செப்டம்பர் 2 தேதிக்கு தள்ளிவைத்தார்.
Related Reading
Frequently Asked Questions
What is த ம க ம ன ன ள?
த ம க ம ன ன ள is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does த ம க ம ன ன ள matter?
த ம க ம ன ன ள matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
