HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

டெல்லி போராட்டம்: சட்டவிரோதமாக யாரையும் கைது செய்யக்கூடாது… உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published अक्टूबर 11, 2026 · Updated अक्टूबर 11, 2026 · By Karen Martinez - hindinewslive247.com

Foto : Karen Martinez - hindinewslive247.com

Hindinewslive247.com – ட ல ல ப ர ட டம - புதுடெல்லி,டெல்லியில் நடைபெறும் போராட்டத்தின்போது சட்டவிரோதமாக யாரையும் கைது செய்யக்கூடாது என்றும், இணைய சேவை மற்றும் மெட்ரோ சேவைகளை மீண்டும் தொடங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக டெல்லியில் நேற்று 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி டெல்லியில் நேற்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

டெல்லிக்கு வரும் ரயில்கள் ரத்து, மெட்ரோ நிலையங்கள் மூடல், பல்வேறு வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் மற்றும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை ஆங்காங்கே தடுத்து வைத்தல், கைது செய்தல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.போராட்டத்தைக் கட்டுப்படுத்த டெல்லி காவல்துறையும் பிற பாதுகாப்புப் படைகளும் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய அரசின் செயல்பாடுகள் நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. .இந்த வழக்கை, நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.

மோகனா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று விசாரித்தது. அப்போது மனுக்களை பரிசீலனை செய்த நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்யம்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், போராட்டம் தொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பித்தனர்.

நீதிபதிகள் கூறியதாவது:-பொது அமைதிக்கு ஏற்படக்கூடிய இடைஞ்சல்களைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவின் கீழ், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய அவசியம் எழும் வரை, மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல் இயங்க வேண்டும்..போக்குவரத்து ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு, நகருக்குள் மக்கள் தடையின்றி செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். பொது அமைதி மற்றும் போக்குவரத்து நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, தடுப்புகளை அமைப்பதற்கான தேவை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.சட்டப்படி இணைய சேவைகள் எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து செயல்பட வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு, நகருக்குள் மக்கள் தடையின்றி நடமாட அனுமதிக்கப்பட வேண்டும்.

சட்டவிரோதமாக யாரையும் கைது செய்யக்கூடாது. அமைதியான முறையில், ஆயுதங்கள் இன்றி மக்கள் கூடுவதைப் பொறுத்தவரை, தடை உத்தரவு அமலில் உள்ள பகுதிக்கு அப்பால் சட்டத்திற்குப் புறம்பான வகையில் எவரையும் தடுத்து வைக்கக்கூடாது..உச்ச நீதிமன்ற வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் BNSS பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நீதி கிடைப்பதில் எந்தவித அச்சமும் ஏற்படாத வகையில், இந்தத் தடையை நீக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறோம்.அமைதியான முறையில் மட்டுமே போராட்டம் நடத்துவதையும், மக்களைத் தூண்டிவிடாமல் இருப்பதையும் வழக்கறிஞர்கள் உறுதி செய்யவேண்டும்.

நாங்கள் நடுநிலையான நடுவர்களாக செயல்படுகிறோம். அதேசமயம், அரசியலமைப்பு சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கடமையும் எங்களுக்கு இருக்கிறது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Related Reading

Frequently Asked Questions

What is ட ல ல ப ர ட டம?

ட ல ல ப ர ட டம is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ட ல ல ப ர ட டம matter?

ட ல ல ப ர ட டம matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.