செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் நவீன பெட்டிகளுடன் இயக்கம்
செந்தூர் எக்ஸ்பிரஸில் நவீன எல்.எச்.பி. பெட்டிகள் இன்று முதல் இயக்கம்
Hindinewslive247.com – ச ந த ர எக ஸ ப - சென்னை எழும்பூர்–திருச்செந்தூர் இடையே தினசரி இயங்கும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு, இன்று (திங்கட்கிழமை) முதல் நவீன எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. திருச்செந்தூர் திசையில் இந்த மாற்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வரும்.
பெட்டி அமைப்பு மாற்றம்
இதுவரை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட 23 பழைய பெட்டிகளுடன் இயங்கி வந்த இந்த ரெயில், இனி 21 நவீன பெட்டிகளுடன் பயணம் மேற்கொள்ள உள்ளது. புதிய அமைப்பில் 1 முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி, 3 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 2 இரண்டடுக்கு ஏ.சி. பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளி பெட்டி மற்றும் 1 ஜெனரேட்டர் பெட்டி ஆகியவை இணைக்கப்படுகின்றன.
வேகம் உயர்வு – பயண நேரம் சுருக்கம்
எல்.எச்.பி. பெட்டிகள் எடை குறைந்த, இலகு ரக ஆகியும் உறுதியான, அதிவேக பயணத்திற்கு தக்கவாறு உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது 775 கிலோமீட்டர் தூரத்தை (தஞ்சாவூர் வழி – மெயின் லைன்) கடக்க 14 மணி நேரம் எடுக்கும் இந்த ரெயிலுக்கு, மணிக்கு 90 கிலோமீட்டர் வரை வேகம் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் சராசரியாக 55.35 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கம் நடைபெற்று வந்தது. இனி 110 கிலோமீட்டர் வேகம் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பயண நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்க விவரங்கள்
சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4 மணிக்கு (வண்டி எண் 20605) புறப்படும் ரெயில், மறுநாள் காலை 6 மணிக்கு திருச்செந்தூரை அடைகிறது. திருச்செந்தூரில் இருந்து இரவு 8.45 மணிக்கு (20606) புறப்படும் மறுமார்க்கம், மறுநாள் காலை 10.25 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது. நெல்லை–திருச்செந்தூர் தண்டவாளம் மின்சார வழித்தடமாக மாற்றப்பட்டதால், இந்த ரெயில் மின்சார இயக்கத்தில் இயங்குகிறது. நிலையங்களில் பிளாட்பார நீட்டிப்பு செய்யப்பட்டதால் பெட்டிகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது.
பயணிகள் எதிர்பார்ப்பு
இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளின் எண்ணிக்கை 11-லிருந்து 9-ஆக குறைக்கப்பட்டுள்ளதால், மொத்த பயணிகள் கொள்ளுதிறன் சுமார் 72 பேர் வரை குறையும் நிலை உருவாகிறது. பழைய கொள்ளுதிறனை மீட்டெடுக்கும் வகையில் கூடுதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Related Reading
Frequently Asked Questions
What is ச ந த ர எக ஸ ப?ச ந த ர எக ஸ ப is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ச ந த ர எக ஸ ப matter?ச ந த ர எக ஸ ப matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.