HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

கலிபோர்னியாவில் தனியாக மலையேற சென்ற இந்திய வம்சாவளி மாணவர் பலி

Published अगस्त 7, 2026 · Updated अगस्त 7, 2026 · By Karen Martinez - hindinewslive247.com

Foto : Karen Martinez - hindinewslive247.com

கலிபோர்னியா மலைப்பகுதியில் தனியாக மலையேறிய இந்திய மாணவர் உயிரிழப்பு

Hindinewslive247.com – கல ப ர ன ய வ ல - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சியரா நெவாடா மலைப்பகுதியில், பிக் பைன் லேக்ஸ் எனும் புகழ்பெற்ற இடத்தில் மலையேற்றம் மேற்கொண்ட இந்திய வம்சாவளி மாணவர் விக்ரம் முபாயி (26) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது உடல் அந்தப் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் மிதக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டது.

பி.எச்.டி மாணவரின் திடீர் மரணம்

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியல் துறையில் பட்டதாரிப் படிப்பை முடித்து, பி.எச்.டி படித்து வந்தவர் விக்ரம் முபாயி. மலையேற்றம் மற்றும் சாகசப் பயணங்களில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் தேதி, அவர் தனியாக மலையேற்றப் பயணத்தைத் தொடங்கினார்.

அன்று இரவு 8:30 மணி அளவில், தனது குடும்பத்தினருக்கு ஜி.பி.எஸ் மூலம் தனது இருப்பிடத்தைக் குறித்துக் கடைசியாக அனுப்பியுள்ளார். அதன் பிறகு, அவரிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை. செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனதால், பதற்றமடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

மீட்புப் பணியும் விசாரணையும்

இதைத் தொடர்ந்து, தேசிய வனப்பகுதியில் ஹெலிகாப்டர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரண்டு நாட்கள் கடுமையாகத் தேடிய பிறகு, அங்குள்ள ஏரி ஒன்றில் விக்ரம் முபாயியின் உடல் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் அவரது உடலைக் கைப்பற்றி, பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் மலையிலிருந்து தவறி விழுந்து ஏரியில் மூழ்கினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அவரது மரணத்தில் எந்தவித சதித்திட்டமும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமூக சேவை மற்றும் சாகசங்களில் ஈடுபாடு கொண்ட இந்திய வம்சாவளி மாணவர் விக்ரம் முபாயியின் திடீர் மரணம், அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Reading

Frequently Asked Questions

What is கல ப ர ன ய வ ல?

கல ப ர ன ய வ ல is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does கல ப ர ன ய வ ல matter?

கல ப ர ன ய வ ல matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.