HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

ஆஸ்திரேலிய டி20 அணியில் இந்திய வீரருக்கு இடம்

Published जून 12, 2026 · Updated जुलाई 21, 2026 · By Jennifer Anderson - hindinewslive247.com

Foto : Jennifer Anderson - hindinewslive247.com

Hindinewslive247.com – சிட்னி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில், இரு அணிகளுக்கும் இடையே நடந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை வென்றது..ஆஸ்திரேலியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டி20 போட்டி வருகிற 17-ந்தேதி சட்டோகிரோமில் நடக்கிறது. இந்த டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனேவ அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் இடம் பெற்றிருந்த டிராவிஸ் ஹெட்டுக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதால் அவருக்கு பதிலாக இந்தியாவை சேர்ந்த சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் நிகில் சவுத்ரி முதல்முறையாக ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப் பட்டுள்ளார்..

30 வயதான நிகில் சவுத்ரி டெல்லியில் பிறந்தவர். அவர் 2017-19-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பஞ்சாப் அணிக்காக 14 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்ற நிகில் சவுத்ரி கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக உடனடியாக தாயகம் திரும்ப முடியாமல் அங்கேயே சில மாதங்கள் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்போது ஆஸ்திரேலிய வாழ்க்கை முறை அவருக்கு பிடித்து போக அங்கேயே தங்கிவிட்டார். அத்துடன் அங்கு நடைபெறும் உள்ளூர் கிரிக் கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதில் சிறப்பாக செயல்பட்டதால் பிக்பாஷ் கிரிக்கெட் லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு தேர்வானார்.

அந்த அணிக்காக இதுவரை 32 ஆட்டங்களில் ஆடி 2 அரைசதம் உள்பட 693 ரன்களும், 9 விக்கெட்டும் எடுத்துள்ளார்.2027-ம் ஆண்டு வரை செல்லுபடியாகும் தற்காலிக விசாவை வைத்துள்ள நிகில் சவுத்ரிக்கு இன்னும் அங்கு நிரந்தர வசிப்பிட உரிமை அல்லது குடியுரிமை கிடைக்கவில்லை. ஆனாலும் ஐ.சி.சி. விதிப்படி 5 ஆண்டுகள் தங்கியிருந்தால் அங்குள்ள தேசிய அணிக்காக விளையாடும் தகுதிைய எட்டி விடுவார்கள்.

அந்த வகையில் நிகில் சவுத் ரிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.