ஆடிப்பூர விழா… ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் தேரோட்டம் கோலாகலம்
ஆண்டாள் கோவில் தேரோட்டம் மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது
Hindinewslive247.com – ஆட ப ப ர வ ழ ஸ - விருதுநகர் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று வெள்ளிக்கிழமை அன்று மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது.
திருவிழா நிகழ்வுகள்
ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேரோட்ட திருவிழா மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் நாள்தோறும் ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் வீதி உலா நடைபெற்று வந்தது.
கடந்த 10-ந் தேதி 5 கருட சேவை நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயன திருக்கோல நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்விற்காக கிருஷ்ணன் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவு 12 மணி வரை தரிசனம் நடந்தது.
தேரோட்டம் மிகுந்த பக்தி உணர்வுடன்
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு பூஜையைத் தொடர்ந்து உற்சவர்கள் ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினர். அங்கு தீபாராதனை நடைபெற்றதும் தேர் வடம் பிடிக்கப்பட்டது.
கோவிந்தா.. கோவிந்தா
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி முழக்கம் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோடும் வீதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, திருத்தேரில் வலம் வந்த ஆண்டாளையும் ரெங்கமன்னாரையும் தரிசனம் செய்தனர்.
அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு
தேரோட்டத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. அரசியல் கட்சியினர் மற்றும் சேவை சங்கங்கள் சார்பாக பல்வேறு இடங்களில் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள், நடமாடும் கழிவறை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீயணைப்புத்துறையினர், சுகாதாரத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
Related Reading
Frequently Asked Questions
What is ஆட ப ப ர வ ழ ஸ?ஆட ப ப ர வ ழ ஸ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ஆட ப ப ர வ ழ ஸ matter?ஆட ப ப ர வ ழ ஸ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.