தமிழக நிதிச்செயலர் சித்திக் கடன் விவரங்களை விளக்கினார்
Hindinewslive247.com – தமிழக பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு நிதித்துறை செயலாளர் சித்திக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். மாநிலத்தின் நிதிநிலை தற்போது கடினமான சூழலில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளன. எனவே, மேலும் விலையேற்றம் இருக்காது என்று அவர் உறுதிபடுத்தினார். கடந்த முறை அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியாக இருந்தது. அப்போது மாநில அரசின் கடன் சுமை 3.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு கடனை அதிகமாக உயர்த்தாததால், அது 3.17 சதவீதமாகக் குறையும் என அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் கடன் அடுத்த 50 ஆண்டுகளுக்கு குறைக்க முடியாது. தமிழக அரசின் கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்லும். மத்திய அரசின் அனுமதியோடு தான் கடன் வாங்குகிறோம்.
கடன் அளவு விவரங்கள்
பட்ஜெட்டில் நிதி அமைச்சர் மரியவில்சன் கடன் அளவு பற்றிய தகவல்களை வெளியிட்டார். 2026-27 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மதிப்பிடப்பட்ட ரூ.10 லட்சத்து 99 ஆயிரத்து 458 கோடிக்கு மாறாக, திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.10 லட்சத்து 98 ஆயிரத்து 768 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலுவைப் பொறுப்புகளில் மாநிலத்தின் பொதுக் கடன் மற்றும் பொதுக் கணக்குப் பொறுப்புகள் அடங்கியுள்ளன. மேலும், சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்காக பெறப்பட்ட ரூ.9,523 கோடியும் இந்நிலுவைப் பொறுப்புகளில் அடங்கியுள்ளது. இத்திட்டம் மத்திய அரசுத் துறைத் திட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் கணக்குகளில் உரிய கணக்கு சரிகட்டல்கள் மேற்கொள்ளப்படும்போது, நிலைப் பெறுப்புகள் 9,523 கோடி ரூபாய் குறையும்.
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள்
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜி.எஸ்.டி.பி.) நிலுவைப் பொறுப்புகளின் விகிதம், 2026-27 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருந்த 27.03 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், 2026-27 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 27.01 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொதுக்கடனை பொறுத்த அளவில் 2026-27 ஆம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடி கடன் பெறவும், ரூ.51,971 கோடியை திருப்பி செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருந்த நிகர பொதுக்கடன் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 653 கோடியாகவும், திருத்தப்பட்ட பட்ஜெட்டில் அது ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 964 கோடியாகவும் உள்ளது.
Related Reading
Frequently Asked Questions
What is 50 ஆண ட கள க க கடன?
50 ஆண ட கள க க கடன is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does 50 ஆண ட கள க க கடன matter?
50 ஆண ட கள க க கடன matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
