ஜாமீன்கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மனுத்தாக்கல்
ஜ ம ன க ர ச ன - சென்னை, தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன்கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்..ரூ.100 கோடி
Table of Contents
Hindinewslive247.com – ஜ ம ன க ர ச ன – சென்னை, தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன்கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்..ரூ.100 கோடி லஞ்ச புகார்கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்தார்.
அந்த காலக்கட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ.. அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான பி.டி.அரசகுமார் உள்பட பலருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் பி.டி.அரசகுமார், அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ் (வயது 39), சுரேஷ் (49) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கின் வேகம் சூடுபிடித்தது..முன்ஜாமீன் கேட்டு மனுமேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. பிரமுகருமான முத்துகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.இதனிடையே அன்பில் மகேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து, அன்பில் மகேஷை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைத்து 7 மணி நேரம் விசாரணையும் நடத்தினர். கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார் உள்பட 3 பேரும் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்தநிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், அன்பில் மகேஷ் முதலில் மனு தாக்கல் செய்தார். பின்னர், வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில், அன்பில் மகேஷ் மற்றொரு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரித்தார்.முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், 'இந்த வழக்கில் திருச்சி, சென்னையில் மனுதாரருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய போலீசார் ஆவணங்களை கைப்பற்றினர். தற்போது 10 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதன்படி, 7 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை மனுதாரர் சமர்ப்பித்துள்ளார்..ரூ.400 கோடி வரைஅன்பில் மகேஷ் முன்னாள் அமைச்சர் என்பதால், அவர் எங்கும் தப்பிச் சென்று விடமாட்டார்.
சாட்சிகளையும் கலைக்கமாட்டார். அவர் எப்போது வேண்டுமானாலும், போலீஸ் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளார். எனவே, அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் ஏற்கனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்' என்று வாதிட்டார்.போலீஸ் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஜான் சத்யன், 'இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்துகுமார் தலைமறைவாக உள்ளார். அவரை அன்பில் மகேஷ்தான் பாதுகாத்து வருகிறார். இவரும் நெருங்கிய நண்பர்கள்.
இந்த வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை.இந்த விவகாரத்தில் ரூ.400 கோடி வரை வசூலித்து முறைகேடு செய்யப்பட்டதாக தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால், அந்த தகவல்கள் எதுவும் வெளியே வராது. மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது' என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்பில் மகேசுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்..கோர்ட்டில் ஆஜர்இதனைத்தொடந்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்றிரவு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அன்பின் மகேஷ் பொய்யாமொழி, நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.தொடர்ந்து நடந்த விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி சத்தியமூர்த்தி, அன்பில் மகேசை நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே அன்பில் மகேசுக்கு முதல் வகுப்பு சிறையில் அடைக்கவும், தரமான உணவு வழங்கவும் மற்றும் தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். .காவலில் எடுத்து விசாரணைஇந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் திட்டமிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஓரிரு நாளில் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஜாமீன் கோரிஇந்நிலையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன்கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு வரும் வியாழன் அன்று விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
Related Reading
Frequently Asked Questions
What is ஜ ம ன க ர ச ன?
ஜ ம ன க ர ச ன is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ஜ ம ன க ர ச ன matter?
ஜ ம ன க ர ச ன matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
